×

64வது கிராமி விருதுகள்: இந்தியர் ரிக்கி கெஜ்ஜுக்கு கிராமி விருது

வாஷிங்டன்: 64வது கிராமி விருதுகள் லாஸ் வேகாஸில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் இந்தியரான ரிக்கி கெஜ் விருது வென்றார்.ஆண்டுதோறும் இசை உலகை சேர்ந்த திறமையான கலைஞர்களுக்கு கிராமி விருதுகளை வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழாவை டிரவர் நோவா தொகுத்து வழங்கினார். இதில் பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் ‘டிவைன் டைட்ஸ்’ இந்திய இசை ஆல்பத்துக்கு விருது கிடைத்தது. இந்த விருதை இந்த ஆல்பத்துக்கு இசையமைத்த இந்தியரான ரிக்கி கெஜ் பெற்றார். அவருடன் இதற்கு இசையமைத்த மற்றொரு கலைஞர் ஸ்டூவர்ட் கோப்லெண்டும் விருதை பகிர்ந்துகொண்டார். இதற்கு முன் 2015ல் ‘வைண்ட்ஸ் ஆப் சம்சரா’ என்ற இசை ஆல்பத்துக்காக கிராமி விருதை ரிக்கி கெஜ் வென்றுள்ளார். இது அவருக்கு இரண்டாவது விருதாகும். இது குறித்து ரிக்கி கெஜ் கூறும்போது, ‘மீண்டும் கிராமி விருது வென்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இது இரண்டாவது விருது. ஸ்டூவர்ட் கோப்லெண்டுக்கு 6வது விருது. பெருமையாக உள்ளது’ என்றார். அமெரிக்காவில் பிறந்த ரிக்கி கெஜ், தற்போது பெங்களூரில் வசிக்கிறார். 20 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட இசை விருதுகளை அவர் வென்றுள்ளார்.‘டிவைன் டைட்ஸ்’ இசை ஆல்பத்தை லஹரி மியூசிக் வெளியிட்டுள்ளது. லஹரி மியூசிக் வேலு கூறும்போது, ‘கிராமி விருது பெற்றுள்ள இசை ஆல்பத்தை வெளியிட்டதில் பெருமை அடைகிறோம்’ என்றார். சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பம் விருதை ‘எ கலர்ஃபுல் வேர்ல்ட்’ இசை ஆல்பத்துக்காக இந்திய பாடகியான ஃபால்குனி ஷா பெற்றார். பெஸ்ட் குளோபல் பெர்பார்மன்ஸ் விருதை பாகிஸ்தானை சேர்ந்த பாடகி அரூஜ் ஆஃப்தாப் பெற்றார். கிராமி விருது பெறும் முதல் பாகிஸ்தான் பெண் இவர்தான். சிறந்த சர்வதேச ஆல்பத்துக்கான விருதை அஞ்செலிக்கிவ் கிட்ஜோ, ‘மதர் நேச்சர்’ ஆல்பத்துக்காக வென்றார்.மற்ற விருதுகள் விவரம்:சிறந்த இசை பதிவு  – லீவ் த டோர் ஓபன்சிறந்த ஆல்பம்- ‘வீ ஆர்’ ஆல்பத்துக்காக ஜான் பாடிஸ்டே மற்றும் குழுவினர்சிறந்த பாடல் – பிராண்டன் ஆண்டர்சன், கிரிஸ்டோபர் புரோடிப்ரோவ்ன்சிறந்த புதுமுக கலைஞர் – ஒலிவியா ரொட்ரிகோ சிறந்த பாப் சோலோ – டிரைவர் லைசென்ஸ் ஆல்பம்சிறந்த மியூசிக்கல் திரைப்படம்  -சம்மர் ஆப் சௌல்சிறந்த ராப் பாடல்  – ஜெயில் ஆல்பம்…

The post 64வது கிராமி விருதுகள்: இந்தியர் ரிக்கி கெஜ்ஜுக்கு கிராமி விருது appeared first on Dinakaran.

Tags : 64th Grammy Awards ,Gej ,Washington ,Las Vegas ,Indian Time ,Gage ,Dinakaran ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...